
அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் நடந்த சின்க்பீல்டு கோப்பை செஸ் தொடரில், இந்தியாவின் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டியில் வெஸ்லேயிடம் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்தார்.
டை பிரேக்கர் மற்றும் ஆர்மகெடான் சுற்றுகளுக்குப் பிறகு, விதிமுறைப்படி வெஸ்லே சாம்பியன் பட்டம் வென்று ரூ. 83.78 லட்சம் பரிசும், பிரக்ஞானந்தா ரூ. 74.21 லட்சம் பரிசும் பெற்றனர்.
இந்தத் தொடரின் முடிவில் ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடித்த பிரக்ஞானந்தா, வெஸ்லே, பேபியானோ மற்றும் வின்சென்ட் கீமர் ஆகியோர் அமெரிக்காவில் நாளை தொடங்கும் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளனர்.