
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் தொடங்கிய ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண்டது.
இப்போட்டியில் இந்திய அணி 13-0 என்ற கோல்கள் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் மந்தீப் சிங், தில்பிரீத் சிங், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்து வெற்றி தேடித்தந்தனர்.