
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சிகள் மற்றும் பேரணிகள் வெறுப்பை விதைப்பதாகவும், இந்தியாவில் பல்வேறு வன்முறைகளுக்கு அது காரணமாக அமைந்துள்ளது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம் கூறினார்.
குடிமக்கள் அமைப்பு என்று வரையறுத்து அவர்களின் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்குவது வன்முறைக்கான வித்துக்களை தூவுவதாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். பேரணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.