
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஹமில்டன் மற்றும் ரெவன்வுட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், இண்டியானா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த புயலால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.