
செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் ஜூலை 31-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
ஜூலை 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ஓடிடியில் வெளியாக உள்ளது.
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.