
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம், வெளியான 4 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சுமார் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்களின் கணிப்பை விட அதிக லாபம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வாரமும் பெரிய படங்கள் வெளியாகாத நிலையில், இப்படம் 300 கோடி ரூபாய் வசூலை எட்ட வாய்ப்புள்ளதாக திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.