
சிரியாவில் 14 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி, முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
புரட்சிப் படையின் தலைவர் அகமது அல்-ஷாரா புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அசாத் தற்போது ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இந்தத் தீர்ப்பு அசாத் மீண்டும் சிரியா திரும்புவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதோடு, ரஷ்யாவுக்குப் பின்னடைவாகவும் அமெரிக்காவின் ராஜதந்திர வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.