
தமிழக சட்டப்பேரவையில் பேசிய தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், சிங்கப்பெண் சிறப்பு அதிரப்படையில் திருநங்கைகளுக்கு பணிவாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காவல் துறையில் உள்ள 9,129 காலிப் பணியிடங்களை நிரப்பவும், காவலர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக முறைப்படுத்தவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஊர்க்காவல் படையினரின் ஊதியத்தை உயர்த்தி வழங்கவும், காவலர்களுக்கான தினசரி உணவுப்படியை ரூ.300-லிருந்து ரூ.500 ஆக உயர்த்தவும் அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.