
பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில் இந்திய வீரர்கள் 9 தங்கம், 6 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் மணிஷா தங்கம் வென்றதோடு, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரேம் மற்றும் விஜேந்தர் ஆகியோர் தங்கப்பதக்கங்களைக் கைப்பற்றினர்.
மொத்தம் 20 பிரிவுகளில் நடைபெற்ற இந்தத் தொடரில், இந்திய வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கப் பட்டியலில் முன்னிலை வகித்தனர்.