
புதுடெல்லியில் நடைபெறும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், பி.வி.சிந்து கனடாவின் வென் யூ ஜாங்கை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் தோல்வியடைந்த நிலையில், ஆயுஷ் ஷெட்டி மற்றும் சாத்விக் சாய்ராஜ்-ஷிராக் ஷெட்டி ஜோடி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி வெற்றி பெற்ற நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவில் அர்ஜூன்-ஹரிகரன் ஜோடி கொரிய ஜோடியிடம் தோல்வியடைந்தது.