
ஈரானின் மத்திய மர்காஜி மாகாணத்தில் சவே-ஹமீதன் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 24 பேர் காயமடைந்த நிலையில், பஸ் ஓட்டுநருக்கு மயக்கம் ஏற்பட்டதே விபத்திற்குக் காரணம் என்று மாகாண போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
ஈரானில் போக்குவரத்து ஒழுங்குமுறைகளை மதிக்காதது மற்றும் போதிய அவசரகால சேவை வசதிகள் இல்லாததால் ஆண்டுக்கு 17 ஆயிரம் பேர் வரை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.