
துல்கர் சல்மானின் 40-ஆவது திரைப்படமான 'ஐ அம் கேம்', சர்வதேச சந்தையில் வெளியிட வசதியாக செப்டம்பர் 3, 2026-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், முதலில் ஆகஸ்ட் 20 அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Wayfarer Films தயாரித்துள்ள இந்த ஃபேண்டஸி த்ரில்லர் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.