
சமூக வலைதளங்களில் திமுக தலைவர்கள் மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோரை ஆபாசமாகவும் தவறாகவும் சித்தரித்து ஏஐ மற்றும் டீப்பேக் தொழில்நுட்பப் போலி வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இதுகுறித்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சம்பந்தப்பட்ட சமூக வலைதளப் பக்கங்களைக் கண்டறிந்து அனைத்துத் தவறான ஏஐ பதிவுகளையும் உடனடியாக நீக்க உத்தரவிட்டனர்.
மேலும், இந்த பதிவுகளை நீக்க எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் அதன் நிலை குறித்த விரிவான அறிக்கையை வரும் 29ஆம் தேதி காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.