
1950-ம் ஆண்டில் கணிதவியலாளர் ஆலன் டூரிங் இயந்திர நுண்ணறிவை மதிப்பிடுவதற்கான 'டூரிங் சோதனை' முறையை அறிவியல் உலகின் முன்வைத்தார்.
1955-ம் ஆண்டில் 'செயற்கை நுண்ணறிவு' என்ற சொல்லை ஜான் மெக்கார்த்தி முன்வைத்த நிலையில், 1956 டார்ட்மவுத் ஆய்வுக் கூட்டம் இதன் திருப்புமுனையாக அமைந்தது.
தற்போது 2026-ல் கேள்விகளுக்குப் பதில் சொல்வதைத் தாண்டி, இணையம் மற்றும் மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்தி வேலைகளைச் செய்து முடிக்கும் செயற்கை நுண்ணறிவு முகவர்கள் முன்னிலைக்கு வந்துள்ளனர்.