
யஷ் நடிப்பில் வெளியான 'டாக்ஸிக்' திரைப்படம் திரையரங்குகளில் தோல்வியடைந்த நிலையில், ஓடிடி வெளியீட்டிற்காகப் படத்தின் காட்சிகளை மாற்றியமைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 300 கோடி மட்டுமே வசூலித்ததால், ஓடிடி உரிமத் தொகை 200 கோடியிலிருந்து 30 கோடியாகக் குறைந்துள்ளது.
நஷ்டத்தைக் குறைக்க வன்முறை மற்றும் படுக்கை காட்சிகளை நீக்கி, புதிய பதிப்பை வெளியிட இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.