
2027 பிப்ரவரியில் நடைபெறவுள்ள மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமையை இலங்கை கிரிக்கெட் வாரியம் இழக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இலங்கை அணி, தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் மட்டுமே தகுதி பெற்றிருந்ததால், தற்போது பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்தத் தொடரை நடத்துவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு அதிகம் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி நிர்வாகக் குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.