/polimer-news/media/media_files/2026/10/14/cmvijayandhravisit-2026-10-14-09-13-50.jpg)
ஆந்திரா சென்ற முதலமைச்சர் விஜய், விஜயவாடாவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து கிருஷ்ணா நதி நீர் பங்கீடு மற்றும் கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் ஆந்திர அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து விஜயவாடாவில் நடைபெற்ற நவராத்திரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட விஜய், தெலுங்கிலேயே உரையாற்றி ஆந்திர மக்களின் அன்புக்கு நன்றி தெரிவித்தார்.