
பயனர்களின் தரவுப் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்ததற்காக மெட்டா நிறுவனத்திற்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்து நியூ மெக்ஸிகோ மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2010 முதல் 2021 வரை பயனர்களின் அனுமதியின்றி தரவுகள் மூன்றாம் நபர்களுக்குப் பகிரப்பட்டதை உயர் அதிகாரிகள் மறைத்து தவறான தகவல்களைப் பரப்பியதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மெட்டா நிறுவன வரலாற்றில் இதுவே மிக அதிகபட்ச அபராதத் தொகையாகும் என்றும், மாநிலச் சட்டங்களை அந்நிறுவனம் 40 மில்லியனுக்கும் அதிகமான முறை மீறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.