
சவுதி அரேபிய கடல் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மீனவர் சங்கர் இன்று உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சங்கர் சவுதி அரேபிய மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதே மாவட்டத்தின் தோப்புவாயில் சுனாமி நகரைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே ஏற்கனவே உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் திருமலைவாசலைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் கடலூர் மாவட்டம் சத்தியக்குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இரு மீனவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.