
இந்தியாவை விட அமீரகத்தில் ஐபோன் 18 ப்ரோ மற்றும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலை கணிசமாகக் குறைவாக உள்ளதால், சில இந்தியர்கள் துபாய்க்குச் சென்று புதிய போன்களை வாங்கி வருகின்றனர்.
துபாயில் ஆப்பிள் ஸ்டோரில் செப்டம்பர் 18ஆம் தேதி விற்பனை தொடங்கிய நிலையில், இந்தியாவை விட துபாயில் விமான டிக்கெட் மற்றும் விசா செலவைச் சேர்த்தாலும் விலை குறைவாக உள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அமீரகத்தில் ஐபோன் 18 ப்ரோவின் ஆரம்ப விலை Dh5,099 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.33 லட்சம்) ஆகவும், இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.1,64,900 ஆகவும் உள்ளது.