
கேப்காம் வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு லெஜண்டரி பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்ஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் தல்சிம் கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் இந்திய நடிகர் வித்யூத் ஜம்வால் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
ஆண்ட்ரூ கோஜி, ஜேசன் மோமோவா மற்றும் ரோமன் ரெயின்ஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 16-ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.