
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 31-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.00 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அந்தந்த மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அதற்கான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.