
வெனிசுலாவின் மேற்கு அபுரே மாநில எல்லைப் பகுதியில் உள்ள கொலம்பிய கிளர்ச்சிக் குழுவான தேசிய விடுதலை ராணுவத்திற்குச் சொந்தமான முகாம் மீது வெனிசுலா ராணுவம் தாக்குதல் நடத்தியது.
டிரோன்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் கடந்த அக்டோபர் 30 அன்று நடத்தப்பட்ட இத்தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க உளவு அமைப்புகளின் ஆதரவு மற்றும் உத்தரவின் பேரில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக வெனிசுலா ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.