/polimer-news/media/media_files/2026/09/19/vlcsnap-2026-09-19-15h28m38s511-2026-09-19-15-29-03.png)
காஞ்சிபுரம் மாவட்ட பேரறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 49 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது.
அமைச்சர்கள் எஸ்.பி.கே.தென்னரசு, ரஞ்சித்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் சினேகா உள்ளிட்டோர் இந்த அரங்கத்தை திறந்து வைத்தனர்.
வலை பயிற்சி கிரிக்கெட் மைதானத்தில் அமைச்சர் தென்னரசு பௌலிங் போட, அமைச்சர் ரஞ்சித்குமார் பேட்டிங் செய்து விளையாட்டைத் தொடங்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.