International
ஈரான் போர்: அமெரிக்காவுக்கு ரூ.3.2 லட்சம் கோடிக்கு மேல் செலவு

ஈரான் போர்: அமெரிக்காவுக்கு ரூ.3.2 லட்சம் கோடிக்கு மேல் செலவு

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பிப்ரவரி 28, 2026 அன்று தொடங்கிய மோதல் 200 நாட்களைக் கடந்து 7-ஆவது மாதத்தில் அடிஎடுத்து வைத்துள்ள நிலையில், அமெரிக்கா இதுவரை சுமார் ₹3.2 லட்சம் கோடியை ($38–40 பில்லியன்) செலவிட்டுள்ளது.

2

செயல்பாட்டுச் செலவுகள், எரிபொருள் செலவுகள் மற்றும் போர் விமானங்கள், டிரோன்கள் இழப்புடன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளதாக பென்டகன் அறிக்கை தெரிவித்துள்ளது.

3

ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட போக்குவரத்து தடங்கல்களால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பணவீக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.