
ஆப்பிரிக்க நாடுகளில் சமூக ஊடகங்கள் வழியாகப் பரவிய 'பிறப்புறுப்பு திருட்டு' என்ற பொய்யான வதந்தியால் கடந்த ஓராண்டில் 80-க்கும் மேற்பட்டோர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
காங்கோவில் தொடங்கிய இந்த வதந்தி புருண்டி, ஜாம்பியா, தான்சானியா, மொசாம்பிக், அங்கோலா, மலாவி மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்குப் பரவியுள்ளது.
மொசாம்பிக்கில் மட்டும் கடந்த மே மாதத்திற்கு முந்தைய ஆறு வாரங்களில் 55 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.