
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளுக்கு நீர்வரத்து மின்னல் வேகத்தில் உயர்ந்துள்ளது.
கபினி அணைக்கு விநாடிக்கு 15,500 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், பாதுகாப்புக் கருதி விநாடிக்கு 8,000 முதல் 10,000 கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ் அணைக்கு தற்போது விநாடிக்கு 10,504 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.