
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் சாட்வொர்த் பகுதியில் என்பிசி செய்தி நிறுவனத்தின் நேரலை ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இரண்டு வணிக கட்டிடங்களுக்கு இடையே விழுந்த ஹெலிகாப்டரால் ஏற்பட்ட தீ சாலையில் இருந்த நான்கு வாகனங்களுக்கும் பரவியது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.