
வங்கதேசத்தில் தட்டம்மை பாதிப்புகளால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,114 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2 அன்று மட்டும் தட்டம்மையால் 4 குழந்தைகள் பலியாகியுள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 1,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
வங்கதேசத்தில் உறுதியான தட்டம்மை பாதிப்புகளின் எண்ணிக்கை 21,623 ஆக உயர்ந்துள்ளது.