
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) முதன்மைத் தேர்வுகள் ஆகஸ்ட் 21, 2026 அன்று காலை 9 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு 933 காலிப் பணியிடங்களுக்கு 8,19,372 பேர் விண்ணப்பித்த நிலையில், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 13,343 பேர் முதன்மைத் தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வுகள் ஆகஸ்ட் 21, 22, 23, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், வினாத்தாள் முறையீடுகளுக்கான இணையதளம் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை திறக்கப்படும்.