
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் 23-ஆவது காமன்வெல்த் போட்டிகளில், பாரா தடகள வீராங்கனை ஷர்மிளா தன்கர் குண்டு எறிதலில் தங்கம் வென்று இந்தியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்துள்ளார்.
ஷர்மிளா தன்கர் 9.81 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்த நிலையில், அதே போட்டியில் ஷைலா வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஆடவர் பளுதூக்குதலில் வல்லூரி அஜய பாபு 330 கிலோ எடையுடன் வெள்ளி வென்றார், மேலும் சர்வேஷ் குஷாரே உயரம் தாண்டுதலில் 2.25 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.