
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பீட்சா கடை நடத்தி வந்த இந்தியரான கவால் பிரீத் சிங் (50), போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார்.
எப்.பி.ஐ சோதனையில் அவரிடமிருந்து 18 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள், 3 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 8 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை மற்றும் 84 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.