
உலகின் 25 சதவீத பதின்ம வயதினர் வாரத்திற்கு ஒரு மணிநேரத்திற்கும் குறைவாகவே உடற்பயிற்சி செய்கின்றனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
11 முதல் 17 வயதுக்கு உட்பட்ட நான்கில் ஒருவர் எந்தவித உடற்பயிற்சியிலும் ஈடுபடுவதில்லை என்பது 140 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உடற்பயிற்சியின்மை இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாக நிறுவனம் எச்சரித்துள்ளது.