
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் நேற்று 11.59 சதவீதம் உயர்ந்து 1,300 ரூபாய்க்கு நிறைவடைந்துள்ளது.
இதன் மூலம் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 1.83 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 17.58 லட்சம் கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 33.80 சதவீதம் அதிகரித்து 29,550 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.