
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘டோரதி’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.
திரைப்படத்தின் வசூலில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை 25 திருநங்கைகளுக்கு படக்குழுவினர் நிதியுதவியாக வழங்கினர்.
திரையரங்குகளில் படம் வெற்றி பெற்றுள்ளதாகவும், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்தார்.