
கொடைக்கானலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக, தானியங்கி எந்திரம் மூலம் ஆவின் பால் விற்பனை செய்யும் புதிய சேவையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கொடைக்கானலில் நாள் ஒன்றுக்கு 3,500 லிட்டர் பால் விற்பனை செய்யப்படும் நிலையில், முதற்கட்டமாக 200 லிட்டர் பால் இந்த எந்திரம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆவின் நிர்வாகம் இந்த புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.