
மேற்காசிய நாடான ஏமனில் இயங்கும் ஹவுதி பயங்கரவாதிகள் சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதால், தம்மாம் மற்றும் ரியாத் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்தனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரியாத் மற்றும் தம்மாமை இணைக்கும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகளின் ரத்து நவம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரியாத் நகருக்கான இண்டிகோ விமானங்கள் அக்டோபர் 31 வரையிலும், அகசா ஏர் நிறுவனத்தின் சேவைகள் நவம்பர் 30 வரையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.