
2027 பிப்ரவரி 14 முதல் 28 வரை நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்த ஐசிசி வாரியம் செப்டம்பர் 1 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் மும்பை மற்றும் வதோதராவில் உள்ள மைதானங்களில் டி20 வடிவில் நடைபெறவுள்ளதாக ஐசிசி தலைவர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன, இதில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்.