
நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை மாரநாடு கருப்பணசாமி கோயிலில் நடைபெற்றதுடன், 'பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு' எனப் படக்குழு அறிவித்துள்ளது.
மதுரையில் நடைபெற்ற இந்தப் பட பூஜையில் பங்கேற்க வந்த நடிகர் தனுஷுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
மேலும், மாரநாடு கருப்பணசாமி கோயிலுக்கு நடிகர் தனுஷ் 18 அடி உயர அரிவாளைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார்.