
பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள 'அன்பே டயானா' திரைப்படம், வருகிற 28-ந்தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.
நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள இப்படத்தில் ரம்யா ரங்கநாதன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் 25 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இந்தச் சிறிய பட்ஜெட் படம், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பெரம்பூரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.