
மேட்டூர் அணையில் தற்போது 82.7 அடி நீர் இருப்பு உள்ளதாகவும், தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் விரைவில் அணை திறக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
வரும் 26-ஆம் தேதிக்குள் அணைக்கு 9 டி.எம்.சி. தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நீர்நிலைகளைத் தூர்வார 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.