
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 41.2 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணியில் பர்வேஸ் ஹொசைன் பொறுப்புடன் ஆடி 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.