செப்டம்பர் 9-ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் அலுவலகத்தில் நடைபெறவுள்ள கூட்டணிக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கடந்த 4-ம் தேதி தவெக அமைச்சர்கள் நேரில் வந்து அழைப்பு விடுத்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இந்த முடிவை உறுதி செய்துள்ளார்.
தவெகவின் கொள்கை நிலைப்பாடுகளைப் பொறுத்து, அக்கட்சிக்கு அளித்து வரும் 5 ஆண்டுகால ஆதரவைத் தொடர்வது குறித்து கட்சி முடிவெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.