
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் வகையில், ரிஷப் பண்ட் முன்னாள் கேப்டன் தோனியுடன் ராஞ்சியில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
28 வயதான ரிஷப் பண்ட், கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 121 பந்துகளில் 81 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஆகஸ்ட் 15-ம் தேதி காலேயில் தொடங்கவுள்ள இலங்கை டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது சமீபத்திய ஐபிஎல் செயல்பாடு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.