Economy
நாடு தழுவிய 3 நாள் வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

நாடு தழுவிய 3 நாள் வங்கி ஊழியர் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

polimernews6h
THE BRIEF
1

வாரத்தில் 5 நாட்கள் வேலை மற்றும் ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொடங்கவிருந்த நாடு தழுவிய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2

டெல்லியில் இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கக் கூட்டமைப்பு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

3

வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாரத்தில் இரண்டு நாள் விடுமுறைக்கான மாற்று வழிகளை ஆராய உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.