
மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டில் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கான தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இரு சமூகங்களுக்கு இடையே வெடித்த மோதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹட்ஜர்-லாமிஸ் மற்றும் பார் எல் கசல் மாகாணங்களின் எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்த வன்முறையில் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 39 பேர் கைது செய்யப்பட்டு தலைநகர் என்ஜாமேனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.