தமிழகத்தில் காற்றாலை மின்கொள்முதலில் உற்பத்தியாளர்களின் திறந்தவெளி பயன்பாடு மற்றும் 'பேங்கிங்' நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
காற்றாலை உற்பத்தி குறையும் காலங்களில் அரசு கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதாலும், 'பேங்கிங்' நடைமுறையாலும் மின்வாரியத்திற்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
ஒரு மெகாவாட்டுக்கு மேல் மின்பளு பெற்றுள்ளவர்களுக்கான விதி தளர்த்தப்பட்டதால் விநியோக பிரிவில் நிர்வாக ரீதியான நஷ்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.