Indian Politics
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரசீது வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரசீது வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Dinamalar1h
THE BRIEF
1

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நுகர்வோர் வாங்கும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2

சென்னையில் கொளத்தூர், மாதவரம், பெரம்பூர் உள்ளிட்ட 30 இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

3

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ரசீது புத்தகங்களை பராமரிப்பது தொடர்பான அறிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.