
திமுகவில் 70 வயதைக் கடந்த மூத்த நிர்வாகிகளை கட்சி ஒதுக்காது என்றும், அவர்களின் அனுபவத்திற்கு ஏற்ப தகுந்த பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
உட்கட்சித் தேர்தல் தொடர்பான தீர்மானம் மூத்த முன்னோடிகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இதற்கான தேதிகளை தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்றார்.
இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிப்பதோடு, வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சி அமைப்பில் இந்த விதிமுறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.