
இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திடம் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பார்கள் என்றும், 2036-க்குள் உலகம் ரோபோக்களின் வசம் செல்லும் என்றும் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
ஏஐ மனிதகுலத்தை அழிப்பதற்கு 10 முதல் 20 சதவீத வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்த மனித அறிவையும் ஏஐ விஞ்சிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
ஏஐ அமைப்புகள் மனிதத் தலையீடு இல்லாமலேயே தங்களை விட சக்திவாய்ந்த அடுத்த தலைமுறை பதிப்புகளை வடிவமைக்கும் திறன் கொண்டவை என ஆந்த்ரோபிக் நிறுவனம் ஏற்கனவே கூறியுள்ளது.